பிணைய பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
bonds sales auction tamilnadu government announceac
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் தமிழக அரசு பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பது குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;-
"தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 5,000 கோடி மதிப்பில் 4 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2000 கோடி, 5 ஆண்டுகள் மற்றும் 6 மாத காலப் பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி, 10 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி, 30 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மார்ச் 11, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் மார்ச் 11, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
bonds sales auction tamilnadu government announceac