திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவியை சீரழித்த நபர் கைது.!
Boy hide marriage and raped college girl in kanniyakumari
திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் சியாஹு(வயது 22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இவர் உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சியாஹுக்கு கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே கல்லூரி மாணவி வேறு ஒருவரை காதலிப்பதாக நினைத்து சந்தேகப்பட்ட சியாஹு உன்னுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து தன்னை சந்தித்து சமரசம் பேச வந்த கல்லூரி மாணவியை மிரட்டி ய சியாஹு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சியாஹுவை கைது செய்தனர்.
English Summary
Boy hide marriage and raped college girl in kanniyakumari