சிறுவனின் உயிரை பறித்த பாக்ஸ் கட்டிங் - சிவகங்கையில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் முடி வெட்டியதற்கு தந்தை கண்டனம் தெரிவித்ததால் பதினைந்து வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அருகே அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவர் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டி உள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, மகனை திட்டியதோடு நன்றாக முடியை குறைத்து வெட்டவும் வைத்துள்ளார். 

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முடி வெட்டியதற்காக தந்தை திட்டியதால், சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy sucide for cut model hair style in sivakangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->