திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட காதலன் கைது.! - Seithipunal
Seithipunal


காதலியின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த வாலிபரின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்ன காட்ராம்பாக்கத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கொல்லமேடு பகுதியை சேர்ந்த விஜய் (வயது 28) என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்.

இதில் ஒருநாள் இன்ஸ்டாகிராமில் பேசிக் கொண்டிருந்தபோது ஆடை இல்லாமல் ஆபாசமாக பார்க்க ஆசை இருப்பதாக கூறி விஜய் அந்த பெண்ணிடம் புகைப்படம் கேட்டுள்ளார். அந்தப் பெண்ணும் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய நிலையில் இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் காவல் நிலையத்திற்கு செல்வதாக இளைஞரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து விஜய் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சைபர் கிரைம் போலீசில் புகாரத்துள்ளார், இது குறித்து 5 கீழ் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஆபாச புகைப்படங்களை நீக்கிவிட்டு விஜய் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boyfriend upload girlfriend nude photos in Villupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->