சாக்கடை கால்வாயில் பெண் குழந்தையை வீசி கொன்ற கொடூர தாய் கைது! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் மணிராஜ் (வயது 24). செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3) மற்றும் லாவண்யா என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. 

கடலூர் மாவட்டம் வடலூரில் ராஜேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் மணிராஜ் வேறு ஊரில் தங்கி ஆடுகள் மேய்த்து கூலி வேலை வருகிறார்.

இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் வடலூர் போலீஸ் நிலையத்தில், தன் கணவர் மணிராஜ் 2 பேருடன் வந்து எனது 5 மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டதாகவும், எனது குழந்தையை மீட்டு தரவேண்டும் என புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் போலீசார், தொழுதூர் பகுதியில் தங்கி ஆடு மேய்த்து கூலி வேலை பார்த்து வரும் மணிராஜை பிடித்து விசாரித்தனர். இந்த சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனால் புகார் கொடுத்த மணிராஜ் மனைவி ராஜேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராஜேஸ்வரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் தனது குழந்தைக்கு காதில் சீழ் வடிந்ததால் மருந்து போட்டதாகவும், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக என்று வடலூர்-கடலூர் சாலையில் உள்ள அய்யனேரி அருகே கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசி விட்டு தனது கணவர் தன்னிடமிருந்து குழந்தையை தூக்கிச் சென்று விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

போலீசார் இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், அய்யனேரி பகுதிக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தியதில் தாய் ராஜேஸ்வரி தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் 5 மாத பெண் குழந்தையைக் கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசியதாக கைதான ராஜேஸ்வரி தெரிவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brutal mother arrested for throwing baby girl in drain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->