கடலூரில் பிணத்தை வாய்க்காலில் தூக்கி செல்லும் கொடுமை! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கிருஸ்துவ மக்கள் கடந்த 50 வருடங்களாக சுடுகாடு வேண்டி மனுக்கள் பலவற்றை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கின்றனர்.

குறிஞ்சிப்பாடி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மக்கள் சுடுகாடு வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இந்த பகுதி மக்களின் சுடுகாடு கேகே நகரில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களின் பிணங்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது இடையே ஒரு வாய்க்கால் இருப்பதாகவும் அதில் தண்ணிர் தேங்கிய நிலை இருந்தால் வாய்க்காலையும் தண்ணீரையும் கடந்து தான் சுடுகாட்டை அடைய முடியும் என்று அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசாங்கத்திடம் எவ்வளவோ மனுக்கள் கொடுத்தாலும் நிலுவையில் கிடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக உயிரிழந்த மாரிதாஸ் என்ற கூலி தொழிலாளியின் உடலை தோளில் சுமந்தபடி செல்லும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களுக்கான நியாயத்தை இந்த பகுதி மக்கள் கேட்டு வருகின்றனர்.

வாய்க்காலை கடந்து செல்ல ஒரு சிறிய பாலம் அமைத்து தர வேண்டி நீண்ட ஆண்டுகளாக அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் நகராட்சியும் இதை கண்டுகொள்ளவில்லை என்று இந்த மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brutality of carrying the dead body through the canal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->