தமிழகத்தில் சரிவை சந்தித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தமிழகத்தில் முறையாக சேவை வழங்காததால், ஜூலை மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.4 லட்சமாக சரிந்துள்ளது. 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை வெளியிடும். தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த தகவலின் படி, தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில், மட்டும் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை, 98.51 லட்சமாக இருந்தது. இது, ஜூலை மாதம் 96.11 லட்சமாக குறைந்து உள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது. நாடு முழுதும் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பிலிருந்து 8.19 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். பி.எஸ்.என்.எல்., 'பிராட்பேண்ட்' சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.52 கோடியாக உள்ளதாக, 'டிராய்' தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL mobile service dicrease in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->