ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேர் ஜாமின் கேட்டு மனு! நீதிமன்றம் போட்ட உத்தரவு!
BSP Armstrong case
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரில் 25 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஒருவர் என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கொலை வழக்கை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமன் மற்றும் அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன்ம், சம்போ செந்தில் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் குமார், விஜயகுமார், சதீஷ்குமார் ஆகிய 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஜாமின் மனு குறித்து காவல்த்துறை தரப்பில் பதில் அளிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.