ரவுடிகளுக்கு வாதாடியதே இவர்தனா? பாஜகவின் முக்கிய புள்ளியை சுத்து போடும் சிபிசிஐடி! - Seithipunal
Seithipunal


தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் பால் கனகராஜ், இன்று எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் பின்புறம் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

ஏற்கனவே ஒரு முறை பால் கனகராஜிடம் சிபிசிஐடி போலீஸ் ஆர் விசாரணை நடத்திய நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

ஆம் சாங் படுகொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டவர்களுக்கு வழக்கறிஞராக பால் கனகராஜ் பணியாற்றியதால் தற்போது சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

பெரம்பூர் பகுதியில் வைத்து, கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார், இதுவரை 22 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் இந்த வழக்கில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டது அமைந்துள்ளது. 

மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் அஸ்வத்தான் மற்றும் அஸ்வத்தாமனின் தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரன் தான் முக்கிய குற்றவாளி என்றும் சொல்லப்படுகிறது. 

இதேபோல் மும்பைக்கு தப்பிச் சென்றுள்ள சம்போ செந்தில் என்பவரும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சம்போ செந்தில், நாகேந்திரன் ஆகியோர் வழக்குகளில் வழக்கறிஞராக ஆஜராகிய பாஜக நிர்வாகி, வழக்கறிஞர் பால் கனகராஜ் இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று காலை பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong case BJP kanagaraj CBCID police enquiry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->