ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன் கைது! - Seithipunal
Seithipunal


வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேறொரு வழக்கில் கைதாகி ரவுடி நாகேந்திரன் சிறையில் உள்ள நிலையில், கைதுக்கான ஆணையை வழங்கிய போலீசார் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே ரவுடி நாகேந்திரனின் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சிகள் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் 

இந்த படுகொலை சம்பவத்தில் தற்போது வரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  இந்த வழக்கை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து முன் விரோதம் தொழில் போட்டி என்ற பல்வேறு கோணங்களில் இந்த வழக்கானது நகர்ந்து கொண்டே இருக்கிறது 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி அஸ்வத்தாமன் என்பவரை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் படி தற்போது அஸ்வத்தாமனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அஸ்தமானின் தந்தை ரவுடி நாகேந்திரனை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong case Nagenthiran arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->