ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக பெண் நிர்வாகி நீக்கம்!
BSP Armstrong case BJP Anjalai
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக பெண் நிர்வாகி நீக்கம்!
கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதை திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிமுக-வில் இருந்த மலர்க்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ் மற்றும் ஹரிஹரன் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான திமுக வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்க்கொடி சேகரை, கட்சியிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியிலிருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், "வட சென்னை மேற்கு மாவட்டத்தின் பணியாற்றி வந்த திருமதி.அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
English Summary
BSP Armstrong case BJP Anjalai