ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுகவிலிருந்து பெண் நிர்வாகி நீக்கம்!
BSP Armstrong case malarkodi arrest ADMK Edappadi Palaniswami announce
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்க்கொடி சேகரை, கட்சியிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதை திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிமுக-வில் இருந்த மலர்க்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ் மற்றும் ஹரிஹரன் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான திமுக வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், பிரபல தாதாவின் மனைவியும், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணை செயலாளராக இருந்தவருமான மலர்கொடியை கட்சியிலிருந்து நீக்குவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக இணை செயலாளராக இருந்த மலர்க்கொடி, கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
BSP Armstrong case malarkodi arrest ADMK Edappadi Palaniswami announce