ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் பறிபோன 2 உயிர்:
bus accident 2 people death police inquiry
தூத்துக்குடி, மேலாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு தெற்கு ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் திருச்செந்தூரில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் இடது பக்கம் பொருட்கள் வைக்கும் கதவு திறந்து இருந்து கிடந்தது தெரிய வந்தது.
இதனால் செந்தில்குமார் ஆம்னி பேருந்தை முந்தி செல்ல முயற்சி செய்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்தில் திறந்து கிடந்த கதவில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 43) என்பவரும் பேருந்தில் திறந்து கிடந்த கதவில் இடித்து படுகாயம் அடைந்தார்.
இருப்பினும் நிற்காமல் சென்ற பேருந்தின் கதவில் சுப்பையா (வயது 75) என்றவர் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை அடுத்து ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பிரியதர்ஷினி (வயது 23) என்ற பெண்ணின் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் விபத்து ஏற்படுத்திய பேருந்தை அப்பகுதி மக்கள் வழிமறித்து நிறுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும் பலியானவர்களின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
bus accident 2 people death police inquiry