திடீரென வெடித்த அரசு பேருந்து டயர், 5 பயணிகள் படுகாயம்..!
Bus accident In Sivangai District
அரசு பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் இருந்து மேச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பூச்சூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது. இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்ட சக பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bus accident In Sivangai District