விஜய் ''வெற்றி'' உங்கள் கையில்... நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்த புஸ்ஸி ஆனந்த்!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதனை தொடர்ந்து ''தமிழக வெற்றி கழகம்'' என்ற அரசியல் கட்சியை தொடங்கி இனி சினிமாவில் நடிப்பதில்லை எனவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்காகக் கொண்டு செயல்படுவேன் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

வருகின்ற 2026 தேர்தல் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும். அது உங்கள் கையில் மட்டும் தான் உள்ளது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகின்ற ஒரே தலைவர் விஜய். 

அவர்தான் நமது தலைவர். ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் நிற்பதாக கருத வேண்டும். அவர் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bussi Anand appealed administrators


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->