முதல் வெளிநாட்டு பயணம் : இந்தியா வர இலங்கை அதிபர் திசநாயகே திட்டம்! - Seithipunal
Seithipunal


இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே கடந்த 23-ம் தேதி   பதவியேற்றுக் கொண்டார். கொழும்புவில் உள்ள அதிபா் செயலகத்தில் அனுரா குமார திசநாயகேக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாடு பயணமாக திசநாயகே எங்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, திசநாயகே சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என தேர்தல் பிரசார சமயத்தில் பேச்சுக்கள் எழுந்த நிலையில், இலங்கையில் இதற்கு முந்தைய அதிபர்கள் தங்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கே வருகை புரிந்து உள்ளனர்.

மேலும் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்ததாகவும், இதனை ஏற்று  திசநாயகே தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First foreign trip sri lankan president disanayake plan to come to india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->