தமிழகம் முழுவதும் கூல் லிப் தடை? - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - Seithipunal
Seithipunal


உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கூல் லிப் தயாரிப்பு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராகி, தமிழகத்தில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வாதிட்டனர்.

பின்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழகத்தில் குட்கா தயாரிப்பிற்கு அனுமதி இல்லை.  என்று தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, தற்போது கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்க கூடிய அளவிற்கு தமிழகத்தில் விற்பனை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று குறிப்பிட்ட நீதிபதி,  கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப்பொருட்களை தடை செய்வது குறித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றமே பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cool lip ban across tamil nadu high court madurai branch order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->