அம்பேத்கார் பிறந்தநாள் - தவெக நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!
bussy anand order tvk administors for ambethkar birthday
அம்பேத்கார் சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவிக்கக்கூடாது என்று தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது:-
"நம் கட்சித் தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நாளை ஏப்ரல் 14-ந்தேதி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தங்கள் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
bussy anand order tvk administors for ambethkar birthday