கனடாவில் காலை உணவுத்திட்டம் - முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி - தமிழக அரசு!
Canada govt also morning food for school student
இன்று காலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், "குழந்தைகள் நன்கு கல்வி கற்க வேண்டும் என்றால், அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு பள்ளி வகுப்பறைக்கு செல்ல வேண்டும். புதிய தேசிய பள்ளி உணவு திட்டம் குழந்தைகள் பசியுடன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்.
மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்" எனஅந்த பதிவில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், "தமிழகத்தில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் கனடா நாட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முதலமைச்சர் மு க ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் தமிழக அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
தற்போது அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இதனை பார்த்து அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பது தமிழக முதலவரின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக ஆசு தெரிவித்துள்ளது.
English Summary
Canada govt also morning food for school student