மகிழ்ச்சியில் தேர்வர்கள்! குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு- டி.என்.பி.எஸ்.சி. தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வு தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி. தமிழ்நாட்டின் துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறித் துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய 25 வகை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு மொத்தமாக 2,327 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டது. 

இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 7,90,376 பேர் விண்ணப்பித்தனர். செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 5,81,305 பேர் கலந்து கொண்டனர். இப்போதைய நிலவரப்படி ஒரு பணியிடத்திற்கு சுமார் 228 பேர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது, இதனால் தேர்வாளர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தேர்வு முடிவுகள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த முதன்மைத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பிப்ரவரி மாதத்தில் இப்பணியிடங்களுக்கான இறுதி (முதன்மை) தேர்வு நடத்தப்படும். 

இந்நிலையில், புதிய அறிவிப்பின் அடிப்படையில், முதலில் அறிவிக்கப்பட்ட 2,327 காலியிடங்களுக்கு கூடுதலாக மேலும் 213 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குரூப்-2 தேர்வில் மொத்தமாக 2,540 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்த தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, தேர்வாளர்கள் கடுமையான தயார் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Candidates rejoice Increase in Group 2 2A Vacancies tNPSC Information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->