கடலூர் : தென்பெண்ணையாற்றின் தரைப்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து..! - Seithipunal
Seithipunal



கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் நேற்று இரவு கார் ஒன்று செல்லும்போது , திடீரென இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்த திடீர் நிகழ்வால் கார் ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய கார், தென்பெண்ணையாற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்த ஐந்து பேரும் உடனடியாக காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், காரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவபாலன் மற்றும் சுந்தர் உள்ளிட்ட 5 பேர் பயணித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் ஐந்து பேரும் கடலூரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.

மேலும் இவர்கள் ஐந்து பேரும் புதுச்சேரி மாநிலம் வழியாக வில்லியனூர் செல்வதற்காக கடலூரில் இந்த தரைப்பாலம் வழியாக சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடலூர் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car Overturned in Southpennai River in Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->