அமைச்சர்கள் மீதான வழக்கு ஜன.2 முதல் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு மாற்றம்.!! கலகத்தில் முக்கிய புள்ளிகள்.!!
Case against ministers shifted to Anand Venkatesh session from Jan2
கடந்த ஜூலை மாதம் முதல் எம்.பி/எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழமை விசாரணை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை தானாக முன்வந்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டார். தமிழக உயர்கல்வித்துறைமுன்னாள் அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து விசாணைக்கு எடுத்துள்ளார்.
இவர்களில் அமைச்சர் பொன்முடி, தனக்கு எதிராக தானாக முன்வந்து தொடரப்பட்ட மறுசீராய்வு மீதான விசாரணைகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலக வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதை ஏற்ற மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அடுத்த விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோரின் அமர்வு 3 மாதங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில்3 மாத பணி இடமாற்றத்திற்கு பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு திரும்புகிறார். சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக மீண்டும் பதவி ஏற்கும் ஆனந்த் வெங்கடேஷ் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வழக்குகளை கொண்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் கலகத்தில் உள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Case against ministers shifted to Anand Venkatesh session from Jan2