ரசிகர்கள் காட்சிகளை வரைமுறைப்படுத்துங்க ! தமிழக அரசுக்கு எதிராக வழக்கு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகளிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அனால் முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும்போது அவர்களின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசத்தால் காவாதுறையினர் திண்டாடி போகின்றனர்.

சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறும். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹூமான் இசை நிகழ்ச்சியின் போது அதிகப்படியான கூட்டம் கூடியதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் மு.க ஸ்டாலின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில்  சிக்கியது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் திரைப்படங்களின்  ரசிகர்கள் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதிய திரைப்படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்களின் புதிய பட ட்ரெய்லர் வெளியிடப்படும் போது ரசிகர்கள்  பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.

 

புதிய படங்கள் வெளியாகும் போது ரசிகர்களுக்கான காட்சி திரையிடப்படுவதால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால் உயிரிழப்பு மற்றும் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளரார். சமூக ஆர்வலர் அய்யா  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case against tngovt to Limit the fans movie shows


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->