பணி இடத்தில் செவிலியரிடம் அத்து மீறிய அரசு மருத்துவர் - வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை பிரிவு தலைவராக இருக்கும் மருத்துவர் சுப்பையா சண்முகம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண் ஒருவர், வீட்டின் முன்பகுதியில் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தெரிவித்ததாவது:- ”ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தார். 

அப்போது, அறுவை சிகிச்சை அறையின் அருகே செவிலியர்களின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவருடன் அறுவை சிகிச்சையின் போது மருத்துவ உதவி செய்த செவிலியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் வெளியில் சொல்ல முடியாமல் இருந்து வந்தார். பிறகு செவிலியர்கள் மருத்துவர் மீது புகார் அளிக்க வேண்டுமென்றால், உரிய ஆதாரம் வேண்டும். எனவே, ஆதாரத்தை திரட்டும் வகையில், யாருக்கும் தெரியாமல் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்துள்ளனர். 

அப்போது வழக்கம் போல் டாக்டர் சப்பையா சண்முகம், செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றார். ஆனால், அந்த செவிலியர் சாதுரியமாக அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டார். பிறகு நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட செவிலியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.

அதன்படி அவர், சுப்பையா சண்முகத்திடம் மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாகா கமிட்டி, கடந்த 2 மாதத்திற்கு மேல் புகார் அளித்த செவிலியர்கள் மற்றும் டாக்டர் சுப்பையா சண்முகத்திடம் 3 முறைக்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதேநேரம் விசாகா கமிட்டியின் அறிக்கையை ஓரிரு நாளில் மருத்துவ கல்வி இயக்குநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், டாக்டர் சுப்பையா சண்முகம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாகா கமிட்டியின் அறிக்கையை நீர்த்து போக செய்ய பல வகையில் முயற்சி செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் வெளியில் தெரியாமல் ரகசியமாக இருந்து வந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகியுள்ளது.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் சுப்பையா சண்முகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று செவிலியர்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்தப் புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் ஒருவர் உடன் பணிபுரியும் செவியரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against government doctor for harassment in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->