செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த டி.டி.எப் வாசன் மீது வழக்கு பதிவு.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். பிரபல யூடியூபரான இவர் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். 

இவர் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சில வழக்குகளில் டி.டி.எப் வாசன் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், டி.டி.எப் வாசன் பிரபல தனியார் யூடியூப் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி, போலீசார் டி.டி.எப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed on TTF vasan for kill threat reporter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->