நயினாருக்கு புதிய சிக்கல்.. மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு.!!
case in MaduraiHC branch seeking to stop Tirunelveli constituency election
தமிழ்நாட்டில் மக்களவைப் போது தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த சூழலில் எல்லைத் தொகுதிக்கான தேர்தலை நிறுத்தி வைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் "நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தன் மீதான வழக்குகள் மற்றும் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதனை முறையாக விசாரிக்காமல் தேர்தல் நடத்தும் அதிகாரி அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக வேட்பமான இயற்றப்பட்டதால் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு மனுதாரர் முறையிட்டுள்ளதால் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
case in MaduraiHC branch seeking to stop Tirunelveli constituency election