தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு... ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு .. காவல்துறை எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா, மற்றும் ஓமைக்ரான் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும். உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்த நிகழ்வுக்கு செல்பவர்கள் பத்திரிக்கைகள் நிச்சயம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தேவையற்று வெளியில் சுற்றினால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case registered against those who roamed outside in violation of the curfew


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->