உணவு ஆர்டரில் குவியும் 2000 நோட்டுகள் - சொமோட்டோ தகவல்.! - Seithipunal
Seithipunal


உணவு ஆர்டரில் குவியும் 2000 நோட்டுகள் - சொமோட்டோ தகவல்.!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் திரும்ப பெற்றன. அதே போல் தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது ஏதேனும் ஒரு வங்கியில் கொடுத்து சில்லறை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சொமோட்டோ ஆர்டரில் 72 சதவீத ரூ.2000 நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்னர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்வோர், ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்தாமல் கேஷ் ஆன் டெலிவரியில் உணவு வாங்குகின்றனர். 

அதாவது, சொமோட்டோ ஆர்டரில் பணமாக செலுத்தும் வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக சொமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரூ.100, ரூ.200-க்கு உணவு வாங்குவோர் கூட ரூ.2,000 நோட்டுகளை தருவதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cash on delivery orders paid two thousand notes in zomatto


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->