நமக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே! ஜாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு - சீமான்! - Seithipunal
Seithipunal


ஜாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், 

நாம் தமிழர் கட்சிக்கும் திமுகவுக்கும் தான் இங்கு போட்டியே, தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் நான் இங்கு போட்டி. நாங்கள் தேர்தலுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. இடை தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேதியில் அபிநயா தான் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.

சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது சரியான அரசா? குடும்ப தலைவிக்கு ஆயிரம் ஆனால் குடித்து இறந்தால் 10 லட்சம் வழங்குகிறது. 38 லட்சம் இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.

ஜாதியை ஒழிக்க ஒரே வழி ஜாதி வாரி கணக்கெடுப்பில் நடத்தப்பட வேண்டும் அப்போதுதான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் என இவ்வாறு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Caste wise enumeration is the only way to eradicate caste Seeman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->