#BigBreaking :: குட்கா வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம்..!! சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமா சங்கர், மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரி துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் இவர்களின் 6 பேரின் பெயரும் இடம் பெற்று இருந்தது. அதேபோன்று முன்னாள் அமைச்சர் ரமணா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில் கடந்த முறை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது சிபிஐ தரப்பிலிருந்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் திருத்தம் செய்து தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த பொழுது "இதுவரை குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீது மட்டுமே விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது" என சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் "திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையை வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அனைவரும் அசையா சொத்துக்களை விடுவிக்குமாறு கேட்கப்பட்ட கோரிக்கையை இந்த நீதிமன்றம் நிராகரிக்கிறது. திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு இது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும்" என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI court granted time to file additional chargesheet in Gutka case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->