நீட் முறைகேடு விவகாரம் - 13 பேருக்கு சிபிஐ காவல்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு விவகாரத்தில் இதுவரைக்கும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பேரை சிபிஐ கைது செய்த நிலையில், மீதமுள்ளவர்களை பல்வேறு மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவர்களை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுத்தது.

இதையடுத்து சிபிஐ பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி சந்தீப் குமார் விசாரணை நடத்தியதில், பீகார் போலீசார் கைது செய்த 13 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து அந்த 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cbi custody to thirteen peoples for neet malpractice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->