குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதற்கு பெருந்தொகை லஞ்சமாக வாங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அப்போதைய தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக எம்எல்ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற வரை சென்ற நிலையில் குட்கா ஊழல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சிபிஐ நடத்திய விசாரணையில் குட்கா வியாபாரி மாதவராவ், கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சிபிஐ அதிகாரிகள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் தற்போது குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே ராஜேந்திரன் உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI files chargesheet against Vijayabaskar in Gutka case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->