மீண்டும் மீண்டுமா.! ஈரோட்டில் என்னதான் நடக்குது? 2வது நாளாக சிசிடிவி பழுது.!
CCTV again not working in erode voting machine strong room
ஈரோடு மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் பறிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 220க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் பழுதானது. இதனை அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது. மேலும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இன்று காலை 8 மணி முதல் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை எடுத்து தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிசிடிவி கேமராக்களை வேட்பாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள கண்காணிக்கும் அருகில் பழுது ஏற்பட்டதன் காரணமாக சர்வர் இயங்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையலின் சிசிடிவி கேமராக்கள் 2வது நாளாக பழுதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
CCTV again not working in erode voting machine strong room