மக்களே உஷார்! கொளத்தூர் அருகே போலீசாரிடம் செல்போன் பறிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை : கொளத்தூர் அருகே போலீசாரிடம் செல்போன் பறித்த மர்மநபரை காவல்துறை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நம்மாழ்வார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். சென்னை ஆயுதப்படை விரைவில் இரண்டாம் நிலை போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று சைக்கிளில் அம்பத்தூர் பாடி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தினேஷ் வழிமறித்து அவர்களிடம் இருந்து ரூ.1500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தினேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துவருவதாக கூறப்படுகிறது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell phone confiscated from the police near Kolathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->