பெஞ்சல் புயல் பாதிப்பு - தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு.!
central government committee team visit flood affected area in tamilnadu
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக அதிக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் புயல் பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறும், மத்திய அரசின் பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு, கடந்த 2-ந் தேதி ஒரு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் தமிழக வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்தியக்குழுவினர் நேற்று மாலை சென்னை வந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட பேரழிவிற்கு தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கூறி அதற்கான முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அவர்களிடம் அளித்தார்.
தொடர்ந்து, அவர் மத்தியக்குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. ராகேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழு இன்று ஆய்வை தொடங்குகிறது.
English Summary
central government committee team visit flood affected area in tamilnadu