தென்காசிக்கு வரவுள்ள உள்துறை மந்திரி அமித்ஷா.! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை ஒட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வருகின்ற 5 ஆம் தேதி பிரச்சாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் தென்காசி இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார். பிறகு தென்காசி புதிய பேருந்து நிலையம் வரை திறந்தவெளியில் வாகனத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளதாக தென்காசி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister Amit shah visit Tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->