மதுவில் கவனம் செலுத்தாதீங்க... தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய மத்திய அமைச்சர்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக தான் சிபிஐ விசாரணை கோருவதாகவும், திமுகவினர் ஆட்சியிலும், வளர்ச்சியிலும் கவனத்தை செலுத்த வேண்டும், மாறாக மதுவில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன் தெரிவிக்கையில், "கடந்த வருடம் மரக்காணம் கள்ளச்சார மரணங்கள் குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. 

இந்த விசாரணை தற்போது வரை நீண்டு கொண்டே தான் இருக்கிறது. இந்த விசாரணையில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. எனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்றால், சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும்.

எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம், இதற்கு இது அனைத்திற்கும் திமுக அரசு தான் பொறுப்பு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பு.

காவல்துறை, உள் துறையை தனது கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் இது அனைத்திற்கும் முழு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் இந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டோம். ஆனால் இதுவரை அந்த துறை அமைச்சர் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. 

குறைந்தபட்சம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் கேட்டார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த கள்ளச்சாராய விவகாரத்தை பொருத்தவரை சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும். திமுகவினர் ஆட்சியிலும், வளர்ச்சியிலும் கவனத்தை செலுத்த வேண்டும். மாறாக மதுவில் கவனம் செலுத்தக்கூடாது" என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister L Murugan Advice to DMK Govt And Kallasarayam case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->