சாலையில் நடந்து சென்றது குத்தமா? மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடிய மர்மநபர்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மயிலாப்பூர்வை சேர்ந்தவர் ராணி. இவர் ராயப்பேட்டை நடேசன் சாலையில் நேற்று பகலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரேவந்த மர்மநபர் ஒருவர் " கழுத்தில் நகை அணிந்து கொண்டு தனியாக செல்கிறீர்களே யாராவது பறித்துக் கொண்டு செல்லுகிறார்கள் "என்று ராணியிடம் அன்பாக பேசினார். 

நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நான் ஆட்டோவில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி அந்த மர்மநபர் ராணியை வற்புறுத்தி ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றார். ஆட்டோவில் செல்லும்போது ராணி அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை கழற்றி சொல்லி அதை ஒரு பேப்பரில் மடித்து கொடுப்பது போல் அந்த மர்ம நபர் நாடகமாடினார். பின்னர் ராணியை மயிலாப்பூரில் அவரது வீட்டில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு மர்மநபர்  சென்றுள்ளார்.

அவர் சென்ற போது பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் சங்கச் சங்கிலி இல்லை சிறிய கற்கள் மட்டுமே இருந்தது மர்ம நபர் ராணியை நூதன முறையில் ஏமாற்றி நகையை பறித்து செந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சங்கிலி உடன் தப்பு சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chain snatching from an old lady in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->