இந்தி மொழி சட்ட பெயர் கூடாது! போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பாண்டிச்சேரி மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்றவற்றின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழிகளில் மாற்றம் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்த மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தை புறக்கணித்து இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர், திருப்பூர் நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு மறைமுகமாக திணிக்கும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. 

எங்களது போராட்டம் இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை ஓயாது என்றனர். மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பதாகைகளை வைத்திருந்தனர். 

இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Change legal names in Hindi  Lawyers protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->