செங்கல்பட்டு | அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு - ரவுடி கும்பல் அராஜகம்!
Chengalpattu admk Member Attempt murder case
செங்கல்பட்டு அருகே குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அதிமுக பிரமுகர், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பகவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் அதிமுகவின் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. செந்தில்குமார் கட்டுமான தொழில் செய்து வருவதாகவும் தெரிகிறது.
![](https://img.seithipunal.com/media/crime 45545.png)
இன்று மதியம் வீட்டிலிருந்து வெளியே வந்த செந்தில்குமாரை, பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த செந்தில்குமரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், செந்தில் குமாரை வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற மர்ம கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chengalpattu admk Member Attempt murder case