சென்னை : 5 வருடமாக டபுள் அஜால் குஜால் விபச்சாரம் : அரங்கேறிய கொலையால் அம்பலமான உண்மை.!
chennai aathampakkam murder case
சென்னை : நேற்று ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், விபசாரத்தால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று கொலை நெற்குன்றம் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் கவரில் ஒரு ஆன் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ்கரன் தான் கொலை செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து ஆறு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணேசன் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்துள்ளது. கணேசன் கடந்த 5 வருடங்களாக விருகம்பாக்கம் பகுதியில் விபச்சார தொழில் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக கொலைசெய்யப்பட்ட பாஸ்கரன் அங்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சம்பவம் நடந்த நேற்று, கணேசன் வீட்டிற்கு பாஸ்கரன் தனது பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட இரு பெண்களை கேட்டுள்ளார். அதற்கு கணேசன் அந்த பெண்கள் வருவதற்கு தாமதமாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரத்தில் பாஸ்கரனை கீழே தள்ளிய கணேசன், அவரை அடித்து கொலை செய்து கை கால்களை கட்டி, பிளாஸ்டிக் கவரில் மூட்டையாக தூக்கிவந்து வீசிவிட்டு சென்றது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலையை கணேசன் மட்டும் செய்தாரா? வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai aathampakkam murder case