#BigBreaking | எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று இரவு நடந்த சம்பவம் | கைது செய்யப்படப்போகும் அதிமுகவின் முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டையில் நேற்று இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, தையல் மெஷின், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று அனுமதி இன்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிமுக மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜேஷ் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,

மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai AIADMK EPS Meet Police case file against Rajesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->