அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து.!!
chennai airport 10 flights canceled
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை வலுப்பெற்றது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் தீவிரமடைந்தது.
அசானி புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நேற்று காலை முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை வருகிற 13-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், மீனவர்கள் 15 ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதன் அருகில் உள்ள வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். இந்த புயல் தொடர்ந்து 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அசானி புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
chennai airport 10 flights canceled