வெளுத்துவாங்கபோகும் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை மற்றும் அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஃபெங்கல் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

மழை நிலைமை காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் இன்றைய தேர்வுகள், அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் அனைத்து டிப்ளோமா தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், சென்னையில் கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தொடர்பாக, மழை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai and Alagappa University exams postponed due to heavy rains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->