அடடே! கொளுத்தும் வெளியிலும் ஜில்லுனு ஒரு சாதனை புரிந்த சென்னை!
Chennai August Month Rain Report 2023
தென்மேற்குப் பருவமழை விரைவில் முடிய நிறைவு பெற உள்ள நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே, தமிழகத்தின் பல பகுதிகளில் பகலில் மிதமான வெப்பமும், மாலை மற்றும் இரவில் மழை என்றும் இருந்து வருகிறது.
அதே சமயத்தில் வெயிலும் அதிகபட்சமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் 70 சதவீதம் கூடுதலாக பதிவாய்க்கியுள்ளதாகவும், இது வழக்கமானது இல்லை என்றும் சில தரவுகள் வெளியாகி உள்ளன.
கடந்த 1870 ஆம் ஆண்டு முதல் இதே போன்று ஆறுமுறை பருவ மழை காலங்களில் நடந்துள்ளதாகவும் வெளியான அந்த தரவுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்த வரலாறு இல்லை.
ஆனால் இந்த ஆண்டு நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் 675 மில்லி மீட்டர் முதல் 847 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.
வெப்ப சலனம் காரணமாகவே இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த மழை பெய்து உள்ளதாகவும், இது கனமழையாக இல்லை என்றும் வெளியான தரவுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்திருப்பது இதுவே முதல் வரலாற்றில் முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
என்னதான் சத்தமே இல்லாமல் ஜில்லென்று ஒரு சாதனையை சென்னை நிகழ்த்தி இருந்தாலும், சென்னை வாசிகள் வெயில் வாட்டி எடுத்ததாகவே உணர்கின்றனர்.
English Summary
Chennai August Month Rain Report 2023