3 மணிநேரம் போதையில் கொள்ளை முயற்சி.. காமெடி சரவெடியை கொளுத்திப்போட்ட திருடன்.!
Chennai Avadi ATM Theft Attempt Failure
சென்னையை அடுத்துள்ள ஆவடி பழைய திருவள்ளுவர் நகர் ரயில்வே கேட் பகுதியில் இந்தியன் ஏடிஎம் இருக்கிறது. இங்கு இரண்டு இயந்திரங்களில் பணம் எடுக்கும் வசதிகள் உள்ள நிலையில், கடந்த 12 ஆம் தேதி இரவு 10 மணிக்கு லுங்கி மற்றும் கத்தியுடன் ஒரு கொள்ளையன் நுழைந்துள்ளான்.
வெளியாட்கள் நுழைந்து விடாமல் ஏடிஎம் ஷட்டரை இறக்கி விட்ட நிலையில், உள்ளே இருந்த இரண்டு எந்திரத்தையும் எளிதாக கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான். இதற்காக தான் வைத்திருந்த பொருட்களை வைத்து ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயற்சித்தும் பலனில்லை.
வீட்டில் உள்ள பீரோவை போல நகர்த்த முயற்சித்தும் பலனில்லை. தள்ளாடிய போதையில் மூன்று மணிநேர போராட்டங்கள் அனைத்தும் பலன் தராததால், அங்குள்ள இரயில்வே நிலையத்திற்குள் சென்று போதை மயக்கத்தில் படுத்து உறங்கியுள்ளான்.
பின்னர் மறுநாள் காலையில் காவலாளி சம்பவ இடத்திற்கு வருகையில் கொள்ளை முயற்சி தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆவடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Avadi ATM Theft Attempt Failure