மெரினாவில் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டிய ஜோடியை பிடிக்க தனிப்படை அமைப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், நள்ளிரவில் காரை நிறுத்திய ஒரு ஜோடியிடம், காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர் ரோந்து போலீசார். 

அப்போது மதுபோதையில் இருந்த அந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி ‘உதயநிதியை கூப்பிடுவா’ எனக்கேட்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த ஜோடி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டிய ஜோடி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் சந்திரமோகன், அவரது பெண் தோழியை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai BeachPolice Drunken Man


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->