சென்னை: நைசா பேசி, கார் பைனான்சியரை கடத்திய பெண்! தட்டி தூக்கிய போலீசார்!
Chennai Car Financier Kidnaped case
சென்னை: சாலிகிராமம் கார் பைனான்சியரை கடத்திய வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலிகிராமத்தைச் சேர்ந்த துரை ரகுபதி, கார்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், தங்களிடம் மாருதி கார் ஒன்று அடமானத்துக்கு இருப்பதாக அவர் முகநூலில் விளம்பரம் செய்தார்.
விளம்பரம் பார்த்து துரை ரகுபதியை தொடர்பு கொண்ட குன்றத்தூரைச் சேர்ந்த கவுதம், காரை வாங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து கடந்த 19ம் தேதி இரவு, துரை ரகுபதி கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே காருடன் செல்ல. அங்கு தயார் நிலையில் இருந்த கவுதம் மற்றும் சகாக்கள், துரை ரகுபதியை கடத்தி, காரையும், செல்போனையும் பறித்தனர்.
பின்னர் துரை ரகுபதியை அந்த கும்பல் விடுவிக்கவே, தப்பிவந்த துரை ரகுபதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பேரில், கவுதம், அவரது தோழி ஸ்வேதா (திருவல்லிக்கேணி), நாகராஜன் (கோயம்பேடு), மற்றும் கிஷோர் பாலாஜி (அண்ணாநகர்) ஆகியோரை கைது செய்த போலீசார், பறிக்கப்பட்ட கார் மற்றும் செல்போனை மீட்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சிலரின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை வருகின்றனர்.
English Summary
Chennai Car Financier Kidnaped case