போர்டு நீக்கியாச்சு.. பஞ்சாயத்து முடிச்சாச்சு..!! எல்லாத்துக்கும் காரணம் ஹேக்கர் தான்..சென்னை மாநகர் காவல்துறை விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த சின்ன மலையில் உள்ள சாலையில் ஹோட்டல் ஒன்றின் டிஜிட்டல் விளம்பர பலகையில் இரு தினங்களுக்கு முன்பு அருவருக்கக் கூடிய வகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை கண்ட பெண் ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் சென்னை மாநகர் காவல்துறை, தமிழக காவல்துறை, தமிழக முதல்வர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.

இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை மாநகர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர பலகையை அகற்றியுள்ளனர். மேலும் சென்னை காவல்துறை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "டிஜிட்டல் விளம்பர பலகை அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட அந்த ஓட்டலில் ஓபன் Wi-Fi எனப்படும் கடவுச்சொற்கள் இல்லாத இணையதள வசதி இருந்துள்ளது. இதன் காரணமாக எளிதில் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் அறிவிப்பு பலகையின் தகவல் மாற்றப்பட்டுள்ளது என ஓட்டல் உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

பொது இடங்களில் கடவுச்சொற்கள் இல்லாத WiFi சேவை வழங்குவதில் உள்ள ஆபத்துகளை அறிந்து தனி நபர்களும் நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

விழிப்புணர்வோடு கடுமையான கடவுச்சொற்களை வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விளம்பரத்தில் இருந்தது போன்ற எந்தவித சட்டவிரோத செயல்களும் நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என சென்னை மாநகர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பேசும் பொருளான இந்த விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai City Police explain regarding digital board placed on lodge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->