தொடரும் மர்ம மரணங்கள்.. திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய கல்லூரி மாணவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் அமீனா மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது கல்லூரி தோழி பூனம் என்பவரின் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அதன் பின்னர் உணவருந்தி விட்டு மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல நண்பர்களுடன் வரிசையில் நின்றுள்ளார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே விரைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து போலீசார் சத்தியசாய் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai college student passed away heart Attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->